வளர்ச்சியை நோக்கி இந்தியா : மோடி பேச்சு

5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி-யில், இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஹேக்கதான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவரவித்தார். பின்னர் பேசிய அவர், சென்னை பழமையான நகரங்களில் ஒன்றும் என்றும், சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை மிகவும் சிறந்த உணவு என்றும் கூறினார். வெளிநாட்டு மாணவர்கள் மாமல்லபுரம் சென்று அங்குள்ள கற்சிற்பங்களின் அழகியலை ரசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஹேக்கத்தான் நிகழச்சி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் என்று கூறிய அவர், இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்கும் வகையில் இருக்கும் என்று கூறினார். தொழில்துறையில் சிங்கப்பூருடன் இணைந்து இந்தியா பணியாற்ற தயாராக இருப்பதாக கூறிய அவர், 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். சோர்வின்றி உழைப்பவர்களே வெற்றியாளர்களாக திகழ்வதாகவும், அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துகொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பழமையான மொழி தமிழை போற்றுவோம் என்றும் கூறிய பிரதமர், ஐஐடியில் நடைபெற்ற சிறப்பு கண்காட்சியையும் பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

Related Posts