சிதம்பரத்தின் வழக்கு விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று முடிவடைந்தது. வழக்கு தொடர்பாக எழுத்துப் பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சீலிடப்பட்ட உறையில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இதுவரை 3 முறை விசாரணை நடத்தி உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்பது நாள் விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ கைது செய்தது போன்று அமலாக்கத்துறையும் கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடந்து வந்தது.

Related Posts