வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு புதிய வசதி : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு புதிய வசதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில்

இ.வி.பி என்ற வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று முதல் நடைமுறைபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு வாக்காளராக தகுதி பெறும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்,. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் எவ்வித தவறும் இல்லாமல் செம்மைப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இ.வி.பி. திட்டம் இன்று முதல் 30-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்த திட்டத்தின் படி வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை கீழ்க்கண்ட தகவல்கள் மூலம் சரிபார்த்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1950 என்ற வாக்காளர் ஹெல்ப் லைன், அதற்கான செல்போன் செயலி, எ.வி.எஸ்.பி என்ற இணையதளம், பொதுசேவை மையங்கள், வாக்காளர்கள் சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம் எனவும் அதோடு விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களிடம் கொடுத்தும் பெயர் விவரங்களை சரிபார்க்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts