வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை

வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

      திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மண்டல அளவிளான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 9மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் தற்போது, 5 புள்ளி 82 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் 25 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார். பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தலின் போது கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் எப்போது அறிவிப்பு வெளியிட்டாலும், தேர்தலை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வரும் ஜனவரி மாதம் இறுதியில் வாக்காளர் அட்டை வழங்கப்படும் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Related Posts