வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் அமைச்சர் கடம்பூர்ராஜு

தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடிமாவட்டத்தில் 15 இலட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், 18 வயது நிரம்பியவர்களை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தப்படுவது அதிமுக அரசை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சிபிஐ சோதனைக்குள்ளான அமைச்சர்கூட மடியில் கனமில்லை என தெளிவாக சொல்லியிருப்பதாக தெரிவித்தார்.

Related Posts