வாக்குக்கு 2 ஆயிரம் ரூபாய் விநியோகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மன் ஆகியோரை ஆதரித்து மாம்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்கூட நீட் தேர்வு கூடாது எனக் கூறும் நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலும், நிதின் கட்கரியும் நீட் தேர்வு நீடிக்கும் என உறுதிபடக் கூறியிருப்பதை குறிப்பிட்டார். . எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர்  நிதின்கட்கரி திட்டவட்டமாகக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி.  அதற்கு பாமகவின் பதில் என்ன என்று அவர் வினவினார். கடந்த சட்டப்பரேவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது எப்படி என்பதை தி வீக் பத்திரிக்கையில் வெளியான செய்திக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், வாக்குக்கு 2ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.  , 2 ஆயிரம் ரூபாய் அல்ல 2 லட்ச ரூபாய் கூட வாங்கிக் கொண்டாலும், வாக்குகளை திமுகவுக்கு அளிக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்

 

Related Posts