வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்:சத்யபிரதா சாகு

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக இதுவரை 122 புள்ளி 29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும்,  தங்கம் 812 கிலோ, வெள்ளி 482 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரைஆயிரத்து 576 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்குமுன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றே மாற்றப்பட்டுள்ளது எனவும்,  தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 782 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதி 63ஆயிரத்து 951 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தேவைப்படும் பட்சத்தில் 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் வேலூர் காட்பாடியில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையின் போது தனியார் சிமெண்ட் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts