வாக்குப்பதிவு இயந்திரங்ஜ்கள் கோளாறானதால் ஓட்டுக்கள் பா.ஜ.கவுக்கு விழுந்தன:மாயாவதி

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 91 தொகுதிகளில் சுமார் 9 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவின் போது, இயந்திரங்கள் கோளாறானதால், யானை சின்னத்தில் பதிவான வாக்குகள், பாஜகவின் தாமரை சின்னத்தில் விழுந்ததாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 கட்ட தேர்தல்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை எச்சரித்துள்ள அவர், வாக்கு பதிவாகும் மையங்களை தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

Related Posts