வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றும் .13 இடங்களில் மறுவாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேடில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக அவர் விளக்கமளித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மறு தேர்தல் நடத்தப்படும்எனவும், மறு வாக்குப்பதிவிற்காக தான் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,  தேவையான இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனி, ஈரோட்டிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இது அரசியல் கட்சிகளுக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். வேலூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும், அரசு ஊழியர்களின் அஞ்சல் வாக்குகளில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 75 ஆயிரத்து 614 வாக்குகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 022 வாக்குகள் வந்து சேர்ந்துள்ளன என்றும் அஞ்சல் வாக்குகளை அனுப்ப கால அவகாசம் உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Related Posts