வாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5 சதவீதத்தை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Want create site? Find Free WordPress Themes and plugins.

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத்  தேர்தல்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்சோதனை முயற்சியாக  ஏதாவது  ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மின்னணு இயந்திரங்களில் பதிவான  வாக்குகளை எண்ணும் அதேவேளையில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் உள்ள 50 சதவீதம் ஒப்புகை சீட்டையும் எண்ணக்கோரி திமுக,காங்கிரஸ்., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இது சாத்தியமில்லாதது என்பதுடன், 50 சதவீத  ஒப்புகை சீட்டுகளை எண்ணி பார்த்தால், 6 நாள் கழித்துதான் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியும் என்றும் தெரிவித்தது. மேலும் வி.வி.பாட் இயந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை எனவும், இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது சாத்தியமில்லை என்றும்கூறியது. இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும்  5வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அமைந்துள்ள 4 ஆயிரத்து 125 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் தலா ஒரு வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா 5 இயந்திரங்களை அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், 20 ஆயிரத்து 625 வி.வி.பாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts