வாக்கு பதிவு இயந்திரஅறைக்கு பெண் அதிகாரி சென்ற விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்தான் குற்றவாளி:  ஆர்.எஸ்.பாரதி

கோவையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்ட அவர்,மதுரையில் வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பெண் அதிகாரி சென்ற விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்தான் குற்றவாளி எனவும், இந்தப் பிரச்சினையில் பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் பழிவாங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். காலியாக உள்ள  நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் நடக்ககூடாது என்று தேர்தல் ஆணைய உதவியோடு ஆளுங்கட்சியினர்  முயற்சி செய்தார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், சுதந்திர இந்தியாவில் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்ற மூலம் அனுமதி வாங்கியது திமுக தான் என தெரிவித்தார்,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு உள்ளாட்சி தேர்தலைக் நடத்தாமல் ஆளுங்கட்சியினர் காலம் தாழ்த்துகிறார்கள்..எனவும் கூட்டுறவு சங்க தேர்தலைக் முறைகேடாக நடத்தியவர் தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.  உள்ளாட்சி தேர்தலைக் நடக்க விடாமல் தடுத்தது திமுக தான் என்று தமிழிசைகுற்றம்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு  பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, தமிழிசை பொய் சொல்வதற்காகவே குமரி ஆனந்தனுக்கு மகளாய் பிறந்திருக்கிறார் என்று தெரிவித்தார்..

Related Posts