வாஜ்பாயின் அஸ்தி ஆறு இடங்களில் கரைக்கப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

வாஜ்பாயின் அஸ்தியை, வைகை, திருவரங்கம் காவிரி, இராமேஸ்வரம் உள்ளிட்ட புனித நதிகளில் கரைக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் பல்வேறு புனித நதிகளில் கரைக்க பாரதிய ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக வாஜ்பாயின் அஸ்தியை பிரதமர் மோடி, பா.ஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தின் பா.ஜ.க தலைவர்களிடம் ஒப்படைத்தனர். தமிழகத்தின் சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,  வாஜ்பாயின் அஸ்தி வைகை, திருவரங்கம் காவிரி, இராமேஸ்வரம் உள்ளிட்ட புனித நதிகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏராளமான மக்கள், பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்த ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இன்றும், நாளையும் பா.ஜ.க, மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி வைக்கப்படும் என தெரிவித்தார். வரும் 26 ம் தேதி பவுர்ணமி அன்று அஸ்தி கரைக்கப்படவுள்ளதகாவும்,  வரும் 28 ம்தேதி வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து சர்வ கட்சி தலைவர்கள் சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், வாஜ்பாய்,அனைத்து மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் எனவும், கட்சிகளை கடந்து மதங்களை கடந்து, அனைவராலும் மரியாதை செலுத்தப்பட்ட தலைவர் எனவும் கூறினார். அவரது அஸ்தியை கரைப்பது ஆன்மிக கடமை என அவர் கூறினார்.

Related Posts