வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம், சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது. வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார். இந்த விழாவில் பாஜக தலைவர் அமித்ஷா,நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 35 கிராம் எடை கொண்ட இந்த 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர், தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது. மறு புறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் 100 ரூபாய் குறியீடும், ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றுள்ளது. இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related Posts