வாணியம்பாடியில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

 

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல்-27

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்த விநாயகம் மகள் மீனா. இவருக்கும், வாணியம்பாடி அடுத்த குரிசிலாப்பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற நாதஸ்வர கலைஞருக்கும், நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன், மணமகள் வீட்டிற்கு புதுமண தம்பதி அழைத்து செல்லப்பட்டனர். கோவிந்தராஜ் வெளியில் சென்றிருந்தபோது, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற மீனா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரைத்தேடி குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, தூக்கில் மீனா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாணியம்பாடி நகர காவல்துறையினர், மீனாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், திருமணமான ஒரே நாளில் மீனா தற்கொலை செய்து கொண்டது ஏன்? என விசாரித்து வருகின்றனர்.

Related Posts