வானத்தில் இருந்து அரசாங்கத்துக்கு வருமானம் கொட்டவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

அரசாங்கத்துக்கு வருமானம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னை தலைமைச்செயலகத்தை முற்றுகையிட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பல்வேறு வாகனங்களில் வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து அரசுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என கூறினார். அரசு வருமானத்தில் பெரும் பகுதி ஊழியர்களுக்கு தான் சம்பளமாக வழங்கப்படுகிறது எனக்குறிப்பிட்ட அமைச்சர், அரசாங்கத்துக்கு வருமானம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை என தெரிவித்தார்.

Related Posts