வால்பாறை அருகே முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த  காட்டு யானைகள், தேவாலய சுற்று சுவர்களை இடித்து சேதப்படுத்தியுள்ளது.

நள்ளிரவு கேரள வனப்பகுதியிலிருந்து 26 யானைகள் தமிழகத்தின் நல்லமுடி பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள ரேசன் கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அந்த கும்பலில் இரு்து பிரிந்த 13 காட்டு யானைகள் முடீஸ் பகுதியில் உள்ள கதிரேசன் என்பவரின் கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது. அத்துடன் 7 யானைகள் கூட்டம், முடீஸ் பகுதியிலுள்ள தேவாலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை தூக்கி வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் யானைகள் வனத்துக்குள் செல்லாமல், தொடர்ந்து அப்பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால், மீண்டும் குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Posts