வாஷிங்டனில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டு

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது  நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் பாதுகாப்பிற்காக தனி நபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது. இதனையடுத்து அங்கு சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர்.  இந்நிலையில்  அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்ததாககவும், மேலும் பலர் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.  இதனிடையே இது குறித்து மெட்ரோபொலிட்டன் போலீஸ் கமாண்டர் ஸ்டூவர்ட் எமர்மேன் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்தார். அதேசமயம், இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தின் நோக்கம் குறித்தும் இதுவரை தெரியவில்லை எனக்கூறினார்.மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts