விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் : ஸ்டாலின்

2 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவு, நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமார் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், அந்த இரு தொகுதிகளும் காலியாக இருந்தது. இதனையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என அறிவித்தார்.

திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றும் திமுக கூறியுள்ளது. இதேபோல், செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர், கே.எஸ் அழகிரி, கட்சியினருடன் ஆலோசித்து வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார்

 

Related Posts