விக்கெட் கீப்பிங்கில் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், விக்கெட் கீப்பராக விரிதிமான் சஹா செய்த ஒரு சாதனையை சமன் செய்துள்ளார்.

கொல்கத்தா : மே-16

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான தினேஷ் கார்த்திக், மற்றொரு இந்திய விக்கெட் கீப்பரான விரிதிமான் சஹாவின் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் 3 கேட்சுகள் மற்றும் ஒரு ஸ்டெம்பிங் செய்து எதிர் அணி வீரர்கள் நான்கு பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts