விக்டோரியா கண்ணாடி மாளிகை பல ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

உலகின் புகழ்பெற்ற விக்டோரியா கண்ணாடி மாளிகை பல ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது.

லண்டன் : மே-05

மேற்கு லண்டனில் உள்ள கிவ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகையில் உலகில் மிக அரிதான மற்றும் அபூர்வமான தாவர இனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தாவரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1860ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டாலும், இந்தக் கட்டடத்தின் முழுமையான கட்டமைப்பும் முடிவதற்கு 40 ஆண்டுகள் ஆனது. இந்தக் கட்டடம் முற்றிலும் நவீன மயமாக்கப்படுவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின்னர் இன்று திறக்கப்படுகிறது.

Related Posts