விசாரணை ஆணையத்தில் மாநில தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா ஆஜராகியுள்ளார்.

சென்னை : மே-04

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், ஜெயலலிதா வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணை ஆணையத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா இன்று ஆஜராகியுள்ளார். ஷீலா பிரியா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக பணியாற்றிவயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts