விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். இந்நிலையில்விஜயகாந்தை அ.தி.மு.க- பாஜக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விஜயகாந்துக்கு 3 முதல் 4 இடங்கள் வரை கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக பாஜகபொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ்கோயல் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜயகாந்த் தரப்பில் பா.ம.க.வுக்கு இணையாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக விஜயகாந்த் அ.தி.மு.க. அணியில் இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.. எனினும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார். அவரை சமாதானம் செய்வதற்கு ரஜினி சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts