விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேல்டு சிட்டி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னணி நிறுவனங்கள் இணைந்து 1.5லட்சம் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் கூறினார்.

Related Posts