விஜய் சேதுபதிக்கு ஊட்டிவிட்ட சிம்பு: வைரலாகும் புகைப்படம்

 

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகி வரும் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கு சிம்பு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மே-02

மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களை பலர் நடித்து வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

சமீபத்தில் நாயகர்கள் 4 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு, நடிகர் சிம்பு ஊட்டிவிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts