விஜய் மல்லையாவின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்தது

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்து உத்ரவிட்டது. இதையடுத்து  மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

Related Posts