விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு சென்னை காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்து, போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்போது வரை சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் இன்றும் தொடரும் என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பதற்றமான இடங்கள் எவை என கண்டறிப்பட்டு அந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நாள் முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 2 ஆயிரத்து 700 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, செங்கோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

Related Posts