விநாயகர் சதுர்த்தி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடம்

விநாயகர் சதுர்த்தி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

      இந்துக்களின் முதற் கடவுளான விநாயகர் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே வீடுகளை சுத்தம் செய்து மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை தங்கள் இல்லங்களில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் பால்,பன்னீர், இளநீர்,தயிர் மற்றும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு பிள்ளையாரை நீராட்டி பல்வேறு வகையான பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் அவருக்கு பிடித்தமான அப்பம், அதிரசம், அவல், பொறிக் கடலை, கரும்பு, பழங்கள் ஆகியவற்றை வைத்து படையலிட்டு வழிப்பட்டனர். சென்னையில் 2 ஆயிரத்து 500 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Posts