விநாயகர் சிலையை கரைக்கும்போது 11 பேர் உயிரிழப்பு

போபால் அருகே விநாயகர் சிலையை கரைக்கும்போது ஏரியில் மூழ்கி 11 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், போபால் பகுதியில் உள்ள கட்லபுரா ஏரியில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் பி.சி.சர்மா உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, விநாயகர் சிலையை படகில் ஏற்றிக்கொண்டு ஒரு சிலர் ஏரிக்குள் சென்றபோது, பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் சென்ற 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கியவர்கள் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Posts