விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

தெலுங்கானாவில் மலை பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

      தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

Related Posts