விமானப்படை தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

புல்வாமா தக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே டெல்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பின்னணியில் உள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.  இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டுமொரு தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருப்பதாக தகவல் கிடைத்தாகவும்,  இதனை தடுக்கவே, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அந்த இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் மீது இன்று தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே  இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது.

 

Related Posts