விமானப் படை வீரர்களை பெருமையுடன் கவுரவிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

          இந்திய விமானப் படையின் 86ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. விமானப் படை நாளை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானப் படை தலைமை தளபதி BS தனோவா பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் விமானப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வீரர்களின் சாகசம் நடைபெற்றது. விமானப் படையின் கொடியைப் பிடித்தபடி, தேசியக் கொடியின் மூவர்ணங்களைக் கொண்ட பாராசூட்டுகளில் பறந்தபடி வீரர்கள் வானில் சாகசம் நிகழ்த்தினர்

இந்திய விமானப் படையின் 86ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த நாளில் விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பெருமையுடன் கவுரவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வீரர்களை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பதிவில் விமானப் படை குறித்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமானப் படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாடும் தலைவணங்குவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts