விமான நிலையத்தில் சிறுத்தைக்குட்டி

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து பயணியிடம் இருந்து சிறுத்தைக்குட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது தாய்லாந்தை சேர்ந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை கண்ட அதிகாரிகள் அவரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சிறுத்தைக்குட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து சிறுத்தைக்குட்டியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுத்தைக்குட்டியுடன் தாய்லாந்து பயணியை திருப்பி அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Posts