வியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்

வியட்நாம் நாட்டின் அதிபரான ட்ரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

                வியட்நாம் நாட்டின் அதிபராக கடந்த 2016ஆம் ட்ரான் டாய் குவாங் பதவியேற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார். இவர் கடந்த2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும், 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதே துறையில் அமைச்சராகவும் பணியாற்றினார். வியட்நாம் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக்குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், வியட்நாம் நேரப்படி காலை 10 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts