விராட் கோலி விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி : மே-24

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், புஷ் அப் எடுக்கும் காட்சிகளை வெளியிட்டு, இதுபோன்று உடற்பயிற்சி செய்யும்படி விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, தாம் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டதுடன், இதேபோல், உடற்பயிற்சி செய்யும்படி, பிரதமர் மோடி, தோனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது உடல் திறனை நிரூபிக்கும் உடற்பயிற்சி காட்சிகளை விரைவில் பகிர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Posts