விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வசவப்பப்புரம், வல்லநாடு, செக்காரக்குடி, சவலாபேரி, ஒட்டநத்தம், ஓசனூத்து உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஏழை, எளிய நடுத்தர மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்று தெரிவித்தார். சிலர் வேண்டுமென்றே இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் , கட்சியை உடைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் முடிந்ததும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அவர், எல்லா கிராமங்களிலும் கூடிய விரைவில் இணையதள வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட செக்காரக்குடியில் அன்னையர் தினம் மற்றும் தனது பிறந்தநாளை முன்னிட்டு மகளிருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி  கொண்டாடினார்.

Related Posts