விளைநிலங்களை அழித்து எதற்காக 8 வழி சாலை அமைக்க வேண்டும்

சேலத்திற்கு ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும்போது விளைநிலங்களை அழித்து எதற்காக 8 வழி சாலை அமைக்கவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை : ஜூன்-27

சேலம் – சென்னை இடையே பசுமை வழிச் சாலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாமக சார்பில், விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ராந்தம் கிராமத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தங்களது நிலங்கள் வழியாக பசுமை வழிச் சாலை அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட்டு, சென்னை, வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் சாலையை 6 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், தனக்கு வாக்களித்த மக்களை சந்திக்க தருமபுரி காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டிய அன்புமணி ராமதாஸ், இது ஜனநாயகமா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Posts