விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தல்

 சென்னை பல்லாவரத்தில் தேவாலயத்துக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆண்டனி சார்லஸ் – மீரா தம்பதிகள் தங்களுடைய 3 வயது பெண் குழந்தை பெர்லின் பிரின்சியுடன் பல்லாவரம் நியூ லைப் என்ற் தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். தேவாலயத்தில் சார்லஸ் தம்பதிகள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது, குழந்தை பெர்லின் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வழிபாடு முடிந்து வெளியே வந்த சார்லஸ் தம்பதிகள், குழந்தையை காணாமல் தவித்து, தேடி அலைந்தபின், போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தேவாலயத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவர் துணியை மூடி, குழந்தை பெர்லினை கடத்திச் செல்வது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தை பெர்லின் புகைப்படத்தை சமூக வலைதளங்களிலும், நண்பர்களிடமும் பகிர்ந்து, பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தை பெர்லினை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Posts