விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கோவையில் பரபரப்பு

கோவையில் உள்ள வணிக வளாகத்துக்கு பள்ளி மாணவன் வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை டாடாபாத்தில் மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. நேற்று இரவு மோகன்தாசின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க இருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த மோகன்தாஸ் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இட்த்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் 2 மணி நேரம் சோதனை நடத்தியதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட எண்ணை ஆய்வு செய்த போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவனிடம்  இருந்து அந்த அழைப்பு வந்திருந்ததுது தெரியவந்தது.

தனது நண்பர்களிடம் விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்க எண்ணி அழைத்த போது தவறுதலாக கோவை வணிகவளாக உரிமையாளருக்கு அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. மேலும் இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது என மாணவனுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Posts