விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு மக்கள் முன்னுரிமை தரவேண்டும் – மோடி

ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு மக்கள் முன்னுரிமை தரவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

           ஹாக்கிப் போட்டி மூலம் வரலாற்றில் இடம் பிடித்த தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. தயான் சந்த், சர்வதேச ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி 400-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

            1928ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தயான் சந்த் அடித்த 14 கோல்கள் மூலம், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடபடுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

            இதுகுறித்து அவர், தனது சுட்டுரை பதிவில், ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என கூறியுள்ளார்.  ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

            பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களின் கடின உழைப்பால் பல்வேறு மைல்கற்களை எட்டிபிடிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

             விளையாட்டு துறை சகோதரர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக உள்ளது எனவும், ஆசிய விளயைாட்டு போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டியிலும் இந்திய தடகள வீரர்,வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்காற்றி உள்ளதாகவும் பிரதமர் மோடி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

Related Posts