விழுப்புரத்தில் தேர்தல் பணியாளர்கள் ரெட்கிராஸ் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்தனர்

 

 

விழுப்புரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் ரெட்கிராஸ் அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

தமிழகத்தில்  வரும் 18 ம் தேதி மக்களவை தேர்தலையொட்டி மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் 2,ஆயிரத்து 278  காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ரெட்கிராஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில்  காவலர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட  வாக்குப்பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மே 23 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும்.

முன்னதாக வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்

Related Posts