விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகமாக நபீஸா தேர்வு 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானதிருநங்கைள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. முதல்கட்டமாக நடனப் போட்டிகளும்,தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2019 மிஸ் கூவாகமாக தர்மபுரியை சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள்வழங்கப்பட்டன. .

Related Posts