விழுப்புரத்தில் பரபரப்பு : 10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை

விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சுரம் கிராமத்தை சேர்ந்வர் கேசவன். இவரது மகன் சிவக்குமார் எலவனாசூர்கோட்டை மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாளான நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிவக்குமார் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள இரண்டு பாறைகளுக்கு அருகே சிவக்குமார் கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். நள்ளிரவில் காட்டுப் பகுதிக்கு சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் சிறுவன் உடல் கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன

Related Posts