விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது

குட்கா ஊழல் விவகாரத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

குட்கா விற்க 40 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் காவல்துறை ஆனையர்  ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிபிஐ சோதனை குறித்து ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்றது எனவும், ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Related Posts