விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி: விவசாயிகள் கடும் கொந்தளிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. நிலம் மற்றும் கடலில் கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தின் 3 இடங்கள் உள்பட 55 புதிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41 இடங்களிலும்,  ஓஎன்ஜிசி-க்கு 2 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெண்டர் விடப்பட்டுள்ள 55 இடங்களில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில், 2 இடங்களில் வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் கிடைத்துள்ளது. ஓஎன்ஜிசிக்கு நிலப்பகுதியும், வேதாந்தாவிற்கு கடற்பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts