விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும் : அமைச்சர் காமராஜ் உறுதி

விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இடையேயான 20வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.இதில் 33 மண்டலங்களை சோர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டியை துவக்கி அமைச்சர் காமராஜ்  துவக்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் காமராஜ், தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts