விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்:பாஜக தேர்தல் அறிக்கை

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்  டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது எனவும்,  இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில்பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் எனவும்  தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும் எனவும் அவர் தெரிவித்தார்.  கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், .  5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு.1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்எனவும்,  நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் எனவும்,  60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும்,  2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்

Related Posts