விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம்

சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கும், இரண்டரை ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் இந்த திட்டத்துக்கு பிரதான் மந்திரி கிஷான் மான் – தன் யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய சிறு குறு விவசாயிகள் இணையலாம்.

சேரும் வயதை பொறுத்து 55 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை அடையும் போது மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உள்ளடக்கிய இத்திட்டத்தை, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Related Posts