விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்: உதயநிதி

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வாளவாய்க்கால சுற்று வட்ட சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஏப்ரல் 18க்குப் பிரதமர் மோடி கெட்அவுட் ஆவார் என்று தெரிவித்தார். ஐந்து வருடமாக எதையும் செய்யாத பிரதமர் மோடிக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகள் பற்றி கவலைப்படுவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Related Posts