விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு அதிமுக அரசு அனுமதி தராது

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு அதிமுக அரசு அனுமதி தராது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

      கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசு இடங்கள் தேர்வு செய்தாலும், அதற்கு அனுமதி கொடுப்பது தமிழக அரசுதான் எனவும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் தெரிவித்தார். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தமிழக தேர்தல் ஆணையமே காரணம் எனவும், தேர்தல் ஆணையம் தனக்கு தனி அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை எனவும், செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளித்தார்.

Related Posts