விவசாயி நாட்டை ஆளலாம் விஷவாயு நாட்டை ஆளலாமா: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்

விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடைப் பிரச்சாரம் செய்தார். விழுப்புரத்திற்கும் திமுகவிற்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டி பேசிய அவர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது திமுக ஆட்சிதான் எனக் குறிப்பிட்டார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்தபோது, தமிழகத்திற்கு திமுக பெற்றுத் தந்த திட்டங்களையும் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.

பைட்

விவசாயிகள் நாட்டை ஆளுவதற்கு தான் வரவேற்பு தருகிறேன் எனவும் ஆனால் விஷவாயு நாட்டை ஆளக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் பழனிசாமி தான் ஒரு விவசாயி என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர் இவ்வாறு விமர்சித்தார்.

பைட்

திமுக அழிந்துபோகும் என ராமதாஸ் கூறுவதாகக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், திமுகவை யாராலும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது என எச்சரித்தார். திமுக வன்னியர்களுக்கு என்ன செய்தது என்ற ராமதாசின் கேள்விக்கு, அவரது தேர்தல் அறிக்கையே பதில் என்றும் மு.க.ஸ்டாலின் விளக்கிப் பேசினார்.

Related Posts